மருந்து விற்பனை அமோகம்… லாபமாக ரூ.662 கோடி அள்ளிய சிப்லா

 

மருந்து விற்பனை அமோகம்… லாபமாக ரூ.662 கோடி அள்ளிய சிப்லா

சிப்லா நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.661.8 கோடி ஈட்டியுள்ளது.

மருந்து துறை நிறுவனமான சிப்லா உலகின் பல நாடுகளில் மருந்து விற்பனையில் கொடிகட்டி பறக்கிறது. அந்நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. சிப்லா நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.661.8 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 37.8 சதவீதம் அதிகமாகும்.

மருந்து விற்பனை அமோகம்… லாபமாக ரூ.662 கோடி அள்ளிய சிப்லா
சிப்லா

இந்தியா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சிப்லா நிறுவனத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததே லாபம் அதிகரிப்புக்கு முக்கிய காரணம். 2019 செப்டம்பர் காலாண்டில் சிப்லா நிறுவனத்தின் ஒட்டு மொத்த நிகர லாபம் ரூ.480 கோடியாக இருந்தது. 2020 ஜூன் காலாண்டில் சிப்லா நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.566 கோடி ஈட்டியிருந்தது.

மருந்து விற்பனை அமோகம்… லாபமாக ரூ.662 கோடி அள்ளிய சிப்லா
சிப்லா

2020 செப்டம்பர் காலாண்டில் சிப்லா நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாய் 14.6 சதவீதம் அதிகரித்து ரூ.5,038.3 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மட்டும் சிப்லா நிறுவனத்தின் வருவாய் 17 சதவீதம் அதிகரித்து ரூ.2,090 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் வட அமெரிக்காவில் சிப்லா வருவாய் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1,049 கோடியாக அதிகரித்துள்ளது.