ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா : டெல்லி சென்றார் கமல் ஹாசன்

 

ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா :  டெல்லி சென்றார் கமல் ஹாசன்

மத்திய அரசின் ஒளிப்பதிவு திருத்த மசோதா மூலம் தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும், அத்துடன் திரைப்பட திருட்டுக்கு கடுமையான சிறை தண்டனை , அபராதம் உள்ளிட்டவை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .ஆனால் இந்த மசோதாவிற்கு நடிகர் கமல் ஹாசன், நடிகர் சூர்யா,நடிகர் கார்த்தி, அனுராக் காஷ்யப், வெற்றிமாறன், பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் மத்திய அரசு நினைத்தால் ஒரு படத்தை தடை செய்ய இந்த மசோதாவினால்முடியும் , இதனால் திரைத்துறையின் கருத்து சுதந்திரம் பறிபோகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா :  டெல்லி சென்றார் கமல் ஹாசன்

இந்த மசோதாவிற்கு முதன்முதலில் குரல் கொடுத்தவர் கமல் ஹாசன், சினிமா, ஊடகம், கல்வி ஆகிய மூன்றும் இந்தியாவில் பலரும் அறிந்த மூன்று குரங்குகளாக மட்டுமே இருக்க முடியாது. அதனால், வரவிருக்கும் தீமைக்கு எதிராக குரல் கொடுப்பதே ஜனநாயகத்தை காக்கும் சிறந்த மருந்தாக இருக்கும் என்று தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா :  டெல்லி சென்றார் கமல் ஹாசன்

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா தொடர்பாக தன்னுடைய கருத்தை பதிவு செய்ய டெல்லி சென்றுள்ளார். மதியம் 3 மணிக்கு ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா Standing committee முன்னிலையில் தன்னுடைய கருத்தை பதிவு செய்ய உள்ளார்.