விளையாட்டு வீராங்கனையாக களமிறங்கவுள்ள பிரபல நடிகை!?

    0
    1
    பிரியா பவானி ஷங்கர்

    மேயாத மான் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து ஃபேமிலி ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் செய்தியாளராக இருந்து பின்பு சின்னதிரையில் நுழைந்து வெள்ளித்திரை வரை படிப்படியாகக் கடின உழைப்பால் முன்னேறியவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

    ttn

    மேயாத மான் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து ஃபேமிலி ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர்  கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடத்தி வருகிறார். 

    ttn

    இந்நிலையில் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தை இயக்கிய செல்ல அய்யாவு அடுத்த படத்தில்  நடிக்க பிரியா பவானி ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். இப்படத்தில் ஹீரோவாக நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கிறார். விளையாட்டை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்தில் நடித்தால் பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் முதல் விளையாட்டு சம்பந்தப்பட்ட படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

    ttn

    விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர்   படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு இப்படத்தின் பணிகள் துவங்கவுள்ளது. இதை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. ஏற்கனவே விஷ்ணு, ஜீவா படத்தில்  கிரிக்கெட் வீரராக நடித்தது குறிப்பிடத்தக்கது.