வலிமை படத்துல ‘தல’ க்கு மியூசிக் வேற லெவலா இருக்கும்! யுவன் உறுதி

  0
  9
  வலிமை

  நேர்கொண்ட பார்வை படத்தை அதே கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் வலிமை. இதில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்திற்கு இசை அமைப்பது குறித்து மனம் திறந்துள்ளார் யுவன். சமீபத்தில் நடந்த விகடன் விருதுகள் விழாவிலும் கூட வலிமை படத்தை பற்றி கேட்ட, “படத்தில் இசை மிக நன்றாக இருக்கும்” என்று கூறினார்.

  நேர்கொண்ட பார்வை படத்தை அதே கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் வலிமை. இதில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்திற்கு இசை அமைப்பது குறித்து மனம் திறந்துள்ளார் யுவன். சமீபத்தில் நடந்த விகடன் விருதுகள் விழாவிலும் கூட வலிமை படத்தை பற்றி கேட்ட, “படத்தில் இசை மிக நன்றாக இருக்கும்” என்று கூறினார்

  ajith

  .அஜித்- யுவன் காம்போ என்றாலே படத்தின் பிஜிஎம் மிகச் சிறப்பாக இருக்கும். பில்லா, மங்காத்தா போன்ற படங்களில் யுவனின் பின்னணி இசை மிகவும் கொண்டாப்பட்டது. தற்போது வலிமை படத்தில் அஜித்திற்காக யுவன் அமைத்த இசையை கேட்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.

  yuvan

  வலிமை பற்றி பேசிய யுவன் “ சமீபத்திய வந்த அஜித்தின் எல்லா திரைப்படங்களும் அருமையாக இருந்தன! அவரது படத்தில் இசையமைக்க நான் உண்மையில் ஏங்கிக்கொண்டிருந்தேன்! அந்த வாய்ப்பு வலிமை படத்தில் கிடைத்துள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் இசை படத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் மிக அக்கறை எடுத்துள்ளேன். படம் பார்க்கும்போது பார்வையாளர்கள் இதை மிகவும் பாராட்டுவார்கள்! “  என்று கூறினார்.

  yuvan

  வலிமை படத்திற்கு யுவனின் இசை மேலும் வலிமை சேர்க்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.