மகனின் ரசிகர் வீட்டுக்கு சென்று உணவு சமைத்த நடிகர் விஜய்யின் அம்மா!

  0
  3
  சோபா சந்திரசேகர்

  விஜய்யின் அடுத்த படம் குறித்த சில தகவல்கள் அவவ்போது இணையத்தில்  வெளியாகிவருகிறது. 

  தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக  வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதி என்று அன்பாக அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர்  திரைப்படத்தில் நடித்துவருகிறார். விஜய்யின் அடுத்த படம் குறித்த சில தகவல்கள் அவவ்போது இணையத்தில்  வெளியாகிவருகிறது. 

  tn

  விஜய்யை பொறுத்தவரையில் அவர் இந்தளவிற்கு முன்னேறி இருப்பதற்கு அவரது குடும்பம் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். அதனால் தான் என்னவோ எதிர்காலத்தில் விஜய் அரசியலில் ஈடுபடுவார் என்ற அறிவிப்பை விஜய்க்கு முன் அவரது தந்தை எஸ்ஏசி-யே வெளியிட்டார். அதே சமயம் விஜய் ரசிகர்களுக்கு விஜய் மீது மட்டுமல்லாது அவர் குடும்பத்தினர் மீதும் அன்பு செலுத்தி வருகிறார்கள். 

  இந்நிலையில் விஜய்யின் பெற்றோர் எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் இருவரும் இணைந்து விஜய்யின் ரசிகர் ஒருவர் வீட்டிற்கு சென்றுள்ளார்கள். அப்போது அவர்களுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டு வரவேற்கப்பட்டுள்ளது.

  விஜய்யின் அம்மா சோபா, அவர்களின் வீட்டு  சமையலறைக்குச் சென்று சமைத்து  உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.