‘பிரியா பவானி சங்கருக்கு நான் ப்ரொபோஸ் பண்ணேனா..என்ன கடுப்பேத்தாதீங்க’.. எஸ்.ஜே.சூர்யாவின் அதிரடி ட்வீட் !

  0
  3
  SJ Surya- Priya bhavani shankar

  பிரியா பவானி சங்கரிடம் ‘லவ் ப்ரொபோஸ்’ பண்ணதாகவும் அதனைப் பிரியா ரிஜெக்ட் செய்து விட்டதாஜகவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

  சமீபத்தில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ‘மான்ஸ்டர்’ திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதில், எஸ்.ஜே.சூர்யா மாறுபட்ட நகைச்சுவையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாகப் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர்களின் ஜோடி அனைவராலும் கவரப்பட்டது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிரியா பவானி சங்கரும் எஸ்.ஜே.சூர்யாவும் மற்றொரு திரைப்படத்தில் ஜோடியாக நடித்து வருகின்றனர். 

  ttn

  ‘பொம்மை’ என்னும் அந்த திரைப்படம்  ராதா மோகன் இயக்கத்தில், ஏஞ்சல் ஸ்டுடியோஸ் எல்.எல்.பி நிறுவனம் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வரும் காதலர் தினத்தன்று ( பிப்ரவரி 14) வெளியாக உள்ளது. வழக்கமாக ஒரு ஹீரோவும் ஹீரோயினும் ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் இணைந்து நடித்தாலே கிசு கிசுக்கள் வர தான் செய்யும்.

  ttn

  அதே போல, பிரியா பவானி சங்கரும் எஸ்.ஜே.சூர்யாவும் அடுத்தடுத்த படத்தில் ஒன்றாக நடிப்பதால், இவர்களைப் பற்றிய பரபரப்பான கிசுகிசு ஒன்று பரவி வருகிறது. அதாவது எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கரிடம் ‘லவ் ப்ரொபோஸ்’ பண்ணதாகவும் அதனைப் பிரியா ரிஜெக்ட் செய்து விட்டதாஜகவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

  ttn

  இதனால் கடுப்பான எஸ்.ஜே. சூர்யா, இந்த கிசு கிசு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,’ சில முட்டாள்கள், நான் பிரியாவிற்கு ப்ரொபோஸ் பண்ணதாகவும் அதனை அவர் ரிஜெக்ட் செய்து விட்டார் என்றும் தவறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். மான்ஸ்டர் படத்தில் ஒன்றாக நடித்ததிலிருந்து எனக்கு அவர் ஒரு நல்ல நண்பர், அதுமட்டுமல்லாமல் பிரியா ஒரு சிறந்த நடிகை. தயவு செய்து இந்த மாதிரி தவறான செய்திகளைப் பரப்பி என்னை வெறுப்பேற்றாதீர்கள். நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.