பிரபுதேவாவுடன் காதலில் விழுந்த சாய் பல்லவி…வாரம் ஒருமுறை மீட்டிங்; புலம்பும் கோலிவுட்?!

  0
  9
  சாய்பல்லவி பிரபுதேவா

  காதலில் விழவைத்த அவர் ஒன்றாக சுற்றித் திரிந்து திருமணம் வரை  சென்ற  நிலையில், இருவரும் திடீரென்று  பிரிந்துவிட்டனர்.

  பிரேமம், ஃபிதா, மாரி 2, போன்ற படங்களுக்குப் பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று  மூன்று மொழி படங்களிலும் நடித்து தனக்கு என ரசிகர்களை உருவாக்கியுள்ளார். சமீபத்தில்  செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்ஜிகே திரைப்படத்தில் அவருக்கு மனைவியாக நடித்து அசத்தியிருந்தார்  சாய் பல்லவி. ஆனால்  அந்த படம் எதிர்பார்த்தளவு வரவேற்பை பெறவில்லை எனலாம்.

  ttn

  இந்நிலையில் சாய்பல்லவி பிரபுதேவாவுடன் காதலில் லயத்துப்போய்  இருப்பது தான் கோலிவுட்டின் சமீபத்திய ஹாட்டாப்பிக்காக  உள்ளது. 46 வயதாகும் பிரபு தேவா ரம்லத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். இதனிடையே நடிகை நயன்தாராவை காதலில் விழவைத்த அவர் ஒன்றாக சுற்றித் திரிந்து திருமணம் வரை  சென்ற  நிலையில், இருவரும் திடீரென்று  பிரிந்துவிட்டனர்.

  ttn

  தற்போது பிரபுதேவாவுக்காக இரு நடிகைகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறதாம். அதில் ஒரு நடிகை நம்ம சாய் பல்லவி. உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னதிரையில்  வந்த சாய்பல்லவிக்கு பிரபு மாஸ்டர் மீது கொள்ளை பிரியமாம். சமீபத்தில் மாரி 2 படத்தில்  ரௌடி பேபி பாடலுக்கு பிரபு தேவா தான் கோரியோகிராஃபர். அதிலிருந்து இருவருக்கும் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட்டாகி  உள்ளது என்கிறது நெருங்கிய வட்டாரம்.

  sai

  வாரத்திற்கு ஒருமுறையாவது பிரபு தேவா இருக்கும் இடத்திற்குத் தேடி சென்று சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறாராம் மலர்  டீச்சர். இது எங்க போய்  முடிய போகிறதோ என்று கோலிவுட் வட்டாரத்தில் ஒரே புலம்பல்…