பிகில் 100 நாட்கள்… டிவிட்டரில் தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள்!

  0
  1
  பிகில்

  இப்படத்தைத் தயாரித்துள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு  வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

  நடிகர் விஜய் – இயக்குநர்  அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு  வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

   

  bigil

  பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில்  நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

  இந்நிலையில் பிகில் படம் 100வது நாளை கடந்துள்ள நிலையில், ஸ்பெஷல் ட்வீட் ஒன்றை  போட்டுள்ளார் படத்தின் தயாரிப்பாளர்  அர்ச்சனா கல்பாத்தி. அவரது பதிவில், ‘இந்த வாரத்துடன் பிகில் படம் 100 நாட்களை கடந்துவிடும். இது உலகம் முழுவதும் விஜய் ரசிகர்களால் தான் சாத்தியமானது. அந்த வருடத்தின் மிகப் பெரிய வசூல், ரெக்கார்டு பிரேக்கிங் தமிழ் படமாக அமைந்ததற்கு நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.  இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள தளபதி ரசிகர்கள் #bigil100thday என்ற ஹேஷ்டாக்கை ட்ரெண்டாக்கி  வருகின்றனர்.