‘பிகில் படத்தை நான் இன்னும் பார்க்கவே இல்லை’ : படத்தில் நடித்த பிரபல நடிகர் அதிர்ச்சி தகவல்!

  0
  1
  பிகில்  

  நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

  நடிகர் விஜய் – இயக்குநர்  அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு  வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

   

  bigil
   

  பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில்  நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

   

  நடிகர் ஆனந்தராஜ்

  இந்நிலையில் பிகில்  படம் குறித்து பேசியுள்ள நடிகர் ஆனந்தராஜ், ‘பிகில்  படத்தில் நான் நடித்த பல காட்சிகள் இல்லை. நான் என்ன வசனம் பேசினேன் என்பது கூட யாருக்கும் தெரியாது. இதனால்  இந்த படம் எனக்கு வலியை  தான் கொடுத்தது. அதனால் தான்  நான் இன்றுவரை அந்த படத்தை பார்க்கவே இல்லை.’ என்று வேதனையுடன் கூறியுள்ளார். இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.