நடிகர் அஜித்துடன் இணைகிறேனா? இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் விளக்கம்!

  0
  8
  அஜித்

  அசின், கனிகா ஆகியோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்த இப்படத்தை எஸ்.எஸ்.சக்ரவர்த்தி தயாரித்திருந்தார்

  கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் வரலாறு. அதில் அஜித் மூன்று வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அசின், கனிகா ஆகியோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்த இப்படத்தை எஸ்.எஸ்.சக்ரவர்த்தி தயாரித்திருந்தார்.

  ttn

  இதையடுத்து அஜித் – கே.எஸ்.ரவிக்குமார் மீண்டும் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இணையவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

  ttn

  இந்நிலையில் இதுகுறித்து கே.எஸ்.ரவிக்குமார் விளக்கமளித்துள்ளார். அதில், நேற்று எனது பெயரில் உள்ள டிவிட்டர் கணக்கில் நான் அஜித்துடன் இணைந்து படம் செய்ய போகிறேன் என்றும் அதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது என்று செய்தி வெளியானது. அது முற்றிலும் பொய்யானது. நான் இந்த நாள் வரை எந்த டிவிட்டர் கணக்கையும் வைத்திருக்கவில்லை. அது போலியானது’ என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.