சூப்பர் சிங்கர் ஜூனியர் 7 ஆரம்பம்….புரோமோ வீடியோ!

  0
  7
  சூப்பர் சிங்கர்

  இசையை ரசிக்கும் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்க தவறுவதில்லை. அதனால் தான் இந்த போட்டியானது சீனியர் மற்றும் ஜூனியர் என பல சீசன்களை தாண்டி செல்கிறது.

  சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி கடந்த 6 சீசன்களை தாண்டி 7ஆவது சீசனின்  அடியெடுத்து வைக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இசையை ரசிக்கும் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்க தவறுவதில்லை. அதனால் தான் இந்த போட்டியானது சீனியர் மற்றும் ஜூனியர் என பல சீசன்களை தாண்டி செல்கிறது.

  ttn

  இந்நிலையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 7  விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான புரொமோ  வீடியோவை விஜய்டிவி தங்கள் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில், ‘பாட்டு பாட போறேன்…ஊரே கேட்கதான்; சூப்பர் சிங்கர் ஜூனியர் தேடும் வாண்டு நான் தான்’ என்று சிறுமி பாட்டுப்பாடி கொண்டு அழகாக செல்லும்படியாக அந்த வீடியோ அமைந்துள்ளது.  இதை கண்ட ரசிகர்கள்  க்யூட் புரொமோ  என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். 

  இதுவொருபுறமிருந்தாலும் நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்ட சிலர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டெக்னிக்கல் ரீதியாக சிறந்த போட்டியாளருக்கு சூப்பர் சிங்கர் டைட்டில் எப்போதும் கொடுக்கப்படுவதில்லை என்று விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.