சின்னதிரையை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் ஜொலிக்க வரும் லாஸ்லியா 

  0
  1
  losliya-mariyanesan

  சினிமாவில் நுழைவதற்கு விஜய் டிவி ஒரு என்ட்ரி டிக்கெட் என்று சொல்லும் அளவிற்கு விஜய் டிவியில் தோன்றிய அனைவரும் சினிமாவில் தோன்ற ஆரம்பித்திருக்கிறார்கள். 

  சினிமாவில் நுழைவதற்கு விஜய் டிவி ஒரு என்ட்ரி டிக்கெட் என்று சொல்லும் அளவிற்கு விஜய் டிவியில் தோன்றிய அனைவரும் சினிமாவில் தோன்ற ஆரம்பித்திருக்கிறார்கள். 

  பிக் பாஸ் மூன்றாவது சீசனில் மிகவும் பேசப்பட்ட ஒரு போட்டியாளராக இருந்தவர் லொஸ்லியா. அதேபோல் லொஸ்லியா என்றதும் கவின் சேர்ந்தே தான் நினைவுக்கு வருவார். அந்த அளவிற்கு இருவரின் உறவும் சீசன் முழுக்க பேசும்பொருளாக மாறியது. இன்றுவரையிலும் இருவருக்கும் இடையே இருக்கும் உறவு என்னவென்று தெரியாமல்தான் போய்க்கொண்டிருக்கிறது. முகேன் வெற்றி பெற்ற போதும் லாஸ்லியா தனெக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தியிருக்கிறார். 

  losliya

  அவர் எப்போது திரையில் தோன்றுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் லொஸ்லியா நடிக்க இருக்கும் முதல் படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. லொஸ்லியா ஆர்மி இனி ஆக்டிவ் ஆகிவிடும்.

  Friendship என்று தலைப்பிடப்பட்ட தமிழ் படத்தில் நடிக்க லொஸ்லியா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதன் முறையாக கதாநாயகனாக தமிழில் நடிக்கிறார்.

  இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சுந்தர் கூட்டணி இயக்க உள்ளனர். இவர்கள் ஏற்கனவே சென்னையில் ஒருநாள் 2 மற்றும் அக்னிதேவி என இரு படங்களை இயக்கியுள்ளனர்.

  losliya-with-aari

  நடிகர் ஆரியுடன் மற்றொரு படத்தில் லொஸ்லியா நடிக்க இருப்பதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் போல தமிழ் சினிமாவிலும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.