குலவையிட்டு பொங்கல் கொண்டாடிய ‘மும்பை மோகினி’ : வைரல் போட்டோஸ்!

  0
  3
  சிருஷ்டி டாங்கே

  இந்த படத்தில் சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்கிறார். இதில் மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

  இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு இயக்கி  நடிக்கும் திரைப்படம் கட்டில். மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும்  இந்த படத்தில் சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்கிறார். இதில் மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

  ttn

  இந்நிலையில் கட்டில் படப்பிடிப்பில் படக்குழுவினர் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில் மும்பை பெண்ணான சிருஷ்டி டாங்கே பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என்று சொல்லி இயற்கையை வழிபட்டார். இதுகுறித்து கூறிய இயக்குநர்  இ.வி.கணேஷ்பாபு, ‘உழைக்கும் மக்கள் இயற்கைக்கும்,  மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படும் இந்த பண்டிகையை “கட்டில்” படத்தின் கதாநாயகியாக நடிக்கும் மும்பை பெண் சிருஷ்டி டாங்கே மற்றும் படக்குழுவினரோடு கொண்டாடியது தனிச்சிறப்பு’ என்றார்.

  ttn

  இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் பஸ்ட்லுக் மற்றும் இசைவெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.