எனக்கு சூர்யா, அஜித், விஜய்தான் பிடிக்கும்! – உதயநிதி ஸ்டாலின் பட ஹீரோயின் பளீர்

  0
  2
  aditi rao

  உதயநிதி ஸ்டாலினுடன் சைக்கோ படத்தில் நடிக்கும் அதிதி ராவ் தனக்கு தமிழ் திரை உலகில் சூர்யா, அஜித், விஜய்யை மட்டுமே பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.பிரபல பாலிவுட் நடிகை அதிதி ராவ் தமிழில் தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் சைக்கோ படத்தில் நடித்துள்ளார். மணிரத்னத்தின் காற்றுவெளியிடை படம் மூலமாக அறிமுகமான இவர் அதன்பிறகு செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

  உதயநிதி ஸ்டாலினுடன் சைக்கோ படத்தில் நடிக்கும் அதிதி ராவ் தனக்கு தமிழ் திரை உலகில் சூர்யா, அஜித், விஜய்யை மட்டுமே பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.
  பிரபல பாலிவுட் நடிகை அதிதி ராவ் தமிழில் தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் சைக்கோ படத்தில் நடித்துள்ளார். மணிரத்னத்தின் காற்றுவெளியிடை படம் மூலமாக அறிமுகமான இவர் அதன்பிறகு செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

  udayanithi

  சமீபத்தில் பேட்டி ஒன்றில், தமிழ் திரை உலகில் உங்களுக்குப் பிடித்த நடிகர்கள் யார் என்று இவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “தமிழ் சினிமாவில் எனக்கு சூர்யா, அஜித், விஜய் ஆகிய மூன்று நடிகர்களைத்தான் பிடிக்கும்” என்று கூறியுள்ளார். சைக்கோ படத்தில் தன்னுடன் நடித்த நடிகரின் பெயரைக் கூட கூறாமல் மூன்று பேர் மட்டுமே பிடிக்கும் என்று அதிதி ராவ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே சைக்கோ படப்பிடிப்பின்போது அதிதி ராவுக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் படத்தை இயக்கிய மிஷ்கின்தான் பஞ்சாயத்து செய்து வைத்தார் என்றும் அதனால்தான் உதயநிதி ஸ்டாலின் பெயரை அதிதி சொல்ல மறுத்தார் என்றும் கிசுகிசுக்கள் பரவத் தொடங்கியுள்ளது.