‘அஜித் கேட்ட கேள்வியால் ஷாக் ஆயிட்டேன்’ : வியக்கும் விஜே ரம்யா

  0
  2
   விஜே ரம்யா

  அஜித் குறித்து செய்தி வெளியாவது என்பது அவரது ரசிகர்களுக்குக் கண்டிப்பாகக் கொண்டாட்டமாகத் தான் இருக்கும்

  அஜித் குறித்து செய்தி வெளியாவது என்பது அவரது ரசிகர்களுக்குக் கண்டிப்பாகக் கொண்டாட்டமாகத் தான் இருக்கும். அதை அவரது  ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி விடுவார்கள். காரணம் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத அஜித் தனது குடும்பத்தையும் அதே பாணியில் கொண்டு  செல்கிறார்.  

  ttn

  இந்நிலையில் அஜித் குறித்து பிரபல  விஜே ரம்யா அஜித் குறித்து  பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், பில்லா  படத்தின் போது அஜித்தை சந்தித்து பேட்டி எடுத்தேன். அப்போது எதேச்சையாக அவருடன் பேசினேன். அப்போது என் நாயின் பேரை கூறியிருந்தேன். சமீபத்தில்  நான் அவரை சந்தித்த போது  உங்கள் டைகர் எப்படி இருக்கு? அம்மா எப்படி இருக்காங்க என்று விசாரித்தார். எனக்கு அது மிகவும் பிரமிப்பை தந்தது’ என்றார்.

  ttn

  சமீபகாலமாக சின்னதிரை மட்டுமல்லாது படங்களிலும் நடித்து வரும் ரம்யா விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.