சண்டை காட்சியின்போது கண்ணாடித் துகள் கண்ணில் விழுந்தது - விஷால்

 
விஷால்

விஷால் தயாரித்து நடித்துள்ள வீரமே வாகை சூடும் திரைப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு  26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. குறும்பட இயக்குனர் து.ப.சரவணன் இயக்கத்தில் டிம்பிள் ஹயாதி விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் 2  பாடல்களை விவேகா எழுதியுள்ளார்.

வீரமே வாகை சூடும் படத்தின் விழாவில் பேசிய குணச்சித்திர நடிகர் மாரிமுத்து, படம் வெளியீட்டுக்குப் பிறகு விஷால் கல்யாண சாப்பாடு போடவேண்டும் என்று  விஷாலை கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய விஷால், “புதிய இயக்குனர்கள் வெற்றிப்பெறவேண்டும் என்ற வெறியோடு இருப்பார்கள் என்பதாலேயே அவர்களை பயன்படுத்திக்கொள்கிறேன். சண்டைக் காட்சி படப்பிடிப்பின்போது கண்ணாடித் துகள் கண்ணில் பட்டதால் செல்போனை அருகில் வைத்து பார்க்க முடியவில்லை. அதற்காக சிகிச்சை எடுக்க உள்ளேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வீரமே வாகை சூடும் படம் வெளியாக உள்ளது” எனக் கூறினார்.