மலையாள நடிகர் சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு..

 
நடிகர் சித்திக்

பாலியல் புகாரில் சிக்கியுள்ள மலையாள நடிகர் சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து “ஹேமா கமிட்டி” தாக்கல் செய்தது. ஹேமா கமிட்டியின் அறிக்கைக்கு பிறகு பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் மீது புகார்கள் வெளிவந்தது. அதில் 2016ம் ஆண்டு சினிமாவில் வாய்ப்பு வாங்கி கொடுப்பதாக கூறி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட் நட்சத்திர விடுதியில் மலையாள நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் கேரள மாநில டிஜிபிக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தார்.

மலையாள நடிகர் சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு.. 

இது தொடர்பாக கேரள மாநில சிறப்பு விசாரணை குழு (SIT) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் வழக்கில் முன்ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் நடிகர் சித்திக் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். கடந்த 24ம் தேதி வழக்கு கேரளா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது முன்ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சித்திக், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேலா எம். திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு இது பதிலளிக்குமாறு கேரள அரசு மற்றும் சித்திக் மீது பாலியல் புகார் அளித்தோர் பதில் அளிக்குமாறு நோட்டிஸ் பிறப்பித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அதுவரை நடிகர் சித்திக் கைது செய்ய இடைக்கால தடை விதிப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.