நானும் என் மகனும் இன்று சண்டை போடுவோம் நாளை கட்டிப்பிடிச்சுப்போம்- எஸ்.ஏ.சந்திரசேகர்

 

நானும் என் மகனும் இன்று சண்டை போடுவோம் நாளை கட்டிப்பிடிச்சுப்போம்- எஸ்.ஏ.சந்திரசேகர்

எஸ்.ஏ.சந்திரசேகரின் நான் கடவுள் இல்லை படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

நானும் என் மகனும் இன்று சண்டை போடுவோம் நாளை கட்டிப்பிடிச்சுப்போம்- எஸ்.ஏ.சந்திரசேகர்

இதில் கலந்துகொண்டு பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், “சமுத்திரகனியை தமிழ்நாட்டில் அதிகம் பார்க்க முடியவில்லை. ஐதராபாத்தில் தங்கி தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து வருகிறார். சிறப்பான வளர்ச்சி. பொதுவாக நடிகைகள் நடிக்கரதோடு சரி, டப்பிங் பேச வர மாட்டாங்க, புரமோஷனுக்கு வர மாட்டாங்க. ஆனா எனக்கு இந்த படத்தில் நடித்த இனியா, சாக்ஷி அகர்வால் என இரண்டு நடிகைகள், நடித்து முடித்து, டப்பிங் பேசி, பட விழாவிற்கும் வந்து இருக்கிறார்கள். ரொம்ப சந்தோஷம்.

கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு விழாவிலே விஜய்க்கு பெயர் வைக்க காரணம் பற்றி சொல்லி இருந்தேன். அதை இரண்டு நாட்களில் வேற மாதிரி பேசிட்டாங்கள். ஏன் இப்படி மாறி மாறி பேசுறாங்கன்னு புரியவில்லை.
எனக்கும் என் மகன் விஜய்க்கும் உள்ளது தந்தைக்கும் -மகனுக்குமான பிரச்சனை, குடும்பப் பிரச்சனை. எந்த வீட்டில்தான் பிரச்சனை இல்லை. எந்த வீட்டிலும் அப்பா, மகன் சண்டை போடுவது இல்லையா..? அதுபோல் தான் நானும் விஜய்யும். இன்று சண்டை போட்டுக் கொள்வோம், நாளை சேருவோம். குடும்பப் பிரச்சனையை ஏன் மீடியாவில் பேசவேண்டும். இன்று சண்டை போடுவோம் நாளை கட்டிப்பிடிச்சிப்போம்” எனக் கூறினார்.