ஐதராபாத்தில் முடிந்த அண்ணாத்த ஷூட்டிங்… சென்னை திரும்பும் ரஜினிகாந்த்!

 

ஐதராபாத்தில் முடிந்த அண்ணாத்த ஷூட்டிங்… சென்னை திரும்பும் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது இந்த படம் ரிலீசாக உள்ளது. அதனால் ஷூட்டிங்கை தீவிரப்படுத்தினார் இயக்குநர் சிவா.

ஐதராபாத்தில் முடிந்த அண்ணாத்த ஷூட்டிங்… சென்னை திரும்பும் ரஜினிகாந்த்!

ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் இப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு நடைபெற்று வந்தது. அப்போது, பலருக்கு பாதிப்பு உறுதியானதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு நடிகர்கள் அனைவரும் சென்னை திரும்பினர். இதைத்தொடர்ந்து, கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் மீண்டும் அண்ணாத்த ஷூட்டிங் தொடங்கியது. 20 நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்த்தும், இரு வாரங்களுக்கு முன்னர் நயன்தாராவும் ஐதராபாத் சென்றனர். மீண்டும் பாதிப்பு ஏற்படாத வண்ணம், ஷூட்டிங்கில் பங்கேற்கும் அனைவருக்கும் தினமும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்பட்டது.

ஐதராபாத்தில் முடிந்த அண்ணாத்த ஷூட்டிங்… சென்னை திரும்பும் ரஜினிகாந்த்!

இந்த நிலையில், ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு இன்றுடன் முடிவதால் ரஜினிகாந்த் நாளை சென்னை திரும்புகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இறுதியாக கொல்கத்தாவில் 20 நாட்கள் படப்பிடிப்பை நடத்த இயக்குனர் சிவா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.