“இனி இப்படியொரு அற்புதக் குரல் அமையுமா”?தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உருக்கம்!

 

“இனி இப்படியொரு அற்புதக் குரல் அமையுமா”?தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உருக்கம்!

பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் மறைவுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இரங்கல் தெரிவித்துள்ளார்.

50 நாட்களுக்கு மேலாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 75. 55 ஆண்டுகள் திரை இசையில் சுமார் 42 ஆயிரம் பாடல்கள், பல ஆயிரம் மேடைக் கச்சேரிகள் என ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் எஸ்பிபி. ஒரே நாளில் 19 பாடல்களை பாடிய சாதனை படைத்த இந்த பாடும் நிலா உடலால் மட்டுமே நம்மை விட்டு சென்றுள்ளது.

“இனி இப்படியொரு அற்புதக் குரல் அமையுமா”?தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உருக்கம்!

இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் , “தன்னிகரற்ற கலைஞன், பல மொழி வித்தகர். பலருக்கான குரல்களை தனக்குள்ளே கொண்டவர். ரஜினிக்கொரு குரலும், கமலுக்கொரு குரலும் வளையும். அவர்களே பாடுவது போல இருக்கும். மெட்டுக்குள் மூழ்கி ஆழ்ந்துபோன அமிழ்தங்களை அள்ளியெடுத்து வரும் அற்புதன். இனி இப்படியொரு அற்புதக் குரல் அமையுமா நம் உலகிற்கு எனத் தெரியவில்லை.

“இனி இப்படியொரு அற்புதக் குரல் அமையுமா”?தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உருக்கம்!

இளையராஜாவைக் கேட்கும்போதே #எஸ்பிபியும் கூட இருப்பார். காலை முதல் மாலைவரை உறங்கும் நேரம் தவிர, நம் காதுகளை அதிகபட்சம் நிறைத்தது இவர்களாகத்தானிருக்கும். அதுவும் எஸ்பிபி எல்லா மொழிகளுக்கும் பறந்தார். எல்லா இசையமைப்பாளர்களுக்கும் இசைந்தார். லெஜண்ட்! வேறு வார்த்தை தெரியவில்லை. அற்புதக் குரல் இன்றோடு பாடுவதை நிறுத்திக் கொள்கிறது. பாடுநிலா வேறெதோ உலகில் தன்னை “ஒளி”த்துக் கொள்கிறது. ஆனால் காற்றுள்ள மட்டும் உம் கந்தர்வக் குரலும் இப்பூவுலகில் கலந்தே கிடக்கும். நாங்கள் அதற்கு அடிமையாய் கவிழ்ந்தே கிடப்போம்.

“இனி இப்படியொரு அற்புதக் குரல் அமையுமா”?தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உருக்கம்!

அத்தனை கோடி மக்களின் வேண்டுதலையும் மீறி, நீர் கடந்து போவதை பார்க்கும்போது கடவுள் கருணையற்றுவிட்டதாகவே உணர்கிறோம். இன்னும் கொஞ்ச வருடங்கள் இந்த காற்றைக் காதலித்துக் கொண்டு… அதில் இன்னிசையை நிரப்பிக் கொண்டுமிருந்திருக்கலாம். எங்கள் தங்கக் குரலோனே என்றும் எங்களோடிருப்பீர். உம் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாறட்டும். கண்ணீர் அஞ்சலிகள்” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.