இயக்குநர் ஷங்கர் – லைகா இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி!

 

இயக்குநர் ஷங்கர் – லைகா இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி!

லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் – 2 திரைப்படம் உருவாகி வருகிறது. கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து கோர விபத்து நேர்ந்ததால் படத்தின் ஷூட்டிங் தடைபட்டது. இதன் காரணமாக இயக்குநர் ஷங்கர் மற்ற திரைப்படங்கள் தயாரிக்கும் பணியை தொடங்கினார். பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிப்பில், புதிய படம் தயாரிப்பதற்கான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டார்.

இயக்குநர் ஷங்கர் – லைகா இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி!

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லைகா நிறுவனம், இந்தியன்- 2 படப்பிடிப்பை முடித்து கொடுக்காமல் பிற படங்களை இயக்க ஷங்கருக்கு இடைக்கால தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை அண்மையில் விசாரித்த நீதிமன்றம், ஷங்கருக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. மேலும், இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

இயக்குநர் ஷங்கர் – லைகா இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி!

இந்த நிலையில், லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தியன் 2 படப்பிடிப்பு தொடர்பாக லைகா உடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அக்டோபர் மாதத்திற்குள் படத்தை முடித்துக் கொடுக்க தயார் என்றும் ஜூன் மாதத்திற்குள் இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்க வேண்டுமென லைகா விரும்புகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. இயக்குனர் ஷங்கர் தரப்பு தகவல் அளித்ததையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.