கமலின் உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை அறிக்கை..

 
கமல் ஹாசன்

கடந்த வாரம் அமெரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கமலுக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை போருரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கமல் பூரண நலம் பெற வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் அவருடைய ரசிகர்களும் பால்குடம் எடுப்பது போன்ற பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர்.


இதற்கிடையே கமல்ஹாசன் நலமுடன் இருப்பதாக அவருடைய மகள் ஸ்ருதி ஹாசன் தெரிவித்திருக்கிறார். ” என் தந்தையின் ஆரோக்கியத்திற்காக வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார், விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறார்” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

தற்போது கமலின் உடல் நிலை சீராக இருப்பதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

kamal statement