பிரபல வில்லன் நடிகர் சலீம் கௌஸ் காலமானார்..

 
 Salim Ghouse - பிரபல நடிகர் சலீம் கவுஸ் காலமானார்!

பிரபல வில்லன் நடிகர் சலீம் கௌஸ் காலமானார். அவருக்கு வயது 70.  

பிரபல நடிகர் சலீம் கவுஸ் காலமானார்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகர் சலீம் கௌஸ்.  1952 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த அவர், நாடக கலைஞராக தன் நடிப்பு பயணத்தை தொடங்கியவர்.  பின் நடன இயக்குநராகவும் செயல்பட்டு வந்த சலீம் கௌஸ்,   1978 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஸ்வர்க் நரக்’ திரைப்படத்தின் மூலம்  திரையுலகில் கால்பதித்தார். 

பிரபல நடிகர் சலீம் கவுஸ் காலமானார்!

தமிழில் பிரதாப் போத்தன் இயக்கத்தில்  1989 ஆம் ஆண்டு வெளியான ‘வெற்றி விழா’ படத்தில் வில்லனாக அறிமுகமானார். தொடர்ந்து ‘சின்ன கவுண்டர்’, ‘திருடா திருடா’, ‘சாணக்கியா’, ‘தர்மசீலன்’, ‘வேட்டைக்காரன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 

பிரபல நடிகர் சலீம் கவுஸ் காலமானார்!

அதிலும்  நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தில்  ‘வேதநாயகம்னா பயம்’ என மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி  ரசிகர்களிடையே நீங்கா இடம்பிடித்தவர்.  மூத்த நடிகரான சலீம் கௌஸ்  இன்று  தனது 70 வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.  அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.