நடிகரும், எழுத்தாளருமான ரூபன் கொரோனாவால் உயிரிழப்பு!

நடிகரும், எழுத்தாளருமான  ரூபன் கொரோனாவால் உயிரிழப்பு!

நடிகரும் பிரபல எழுத்தாளருமான ரூபன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 54.

விக்ரம் நடித்த தூள் , விஜய்யின் கில்லி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரூபன். திரைத் துறையில் எழுத்தாளராக பணியாற்றி வந்த இவர், ஒரு சில படங்களில் கதை ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

நடிகரும், எழுத்தாளருமான  ரூபன் கொரோனாவால் உயிரிழப்பு!

இந்நிலையில் நுரையீரல் புற்றுநோய் காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரூபன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எ அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா மற்றும் நுரையீரல் புற்றுநோய் இரண்டிற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.

நடிகரும், எழுத்தாளருமான  ரூபன் கொரோனாவால் உயிரிழப்பு!

இதையடுத்து மறைந்த ரூபனின் உடலை மருத்துவ குழுவினர், ஓயாமரி மயானத்தில் அடக்கம் செய்தனர். ரூபனின் மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.