முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார் நடிகர் சூரி

 

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார் நடிகர் சூரி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் நிதி நெருக்கடியில் அரசு தத்தளிக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நோயாளிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்ததால் சிகிச்சை அளிக்க முடியாமல் திணறியது தமிழக அரசு. மருத்துவ கட்டமைப்பு வசதிகளை பன்மடங்கு அதிகரிக்க வேண்டி இருந்ததால் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார் நடிகர் சூரி

அவரது வேண்டுகோளுக்கிணங்க அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தனியார் நிறுவனங்கள் என பலரும் நிதியுதவி வழங்கினர். முதற்கட்டமாக திரண்ட ரூபாய் 60 கோடியை கொரோனா தடுப்பு பணிக்கு பயன்படுத்துமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில், கொரனோ நிவாரண நிதிக்காக நடிகர் சூரி 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இந்தப் பணத்தை முதல்வர் மு.கஸ்டாலினின் மகனும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினிடம் நேரில் சென்று வழங்கினார்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் சூரி 10 லட்சத்திற்கான காசோலையும் தனது மகள் வெண்ணிலா – மகன் சர்வான் சார்பில் ரூபாய் 25 ஆயிரம் ரொக்கத்தையும் அளித்ததாக பதிவிட்டுள்ளார்.