சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்

 

சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து கொண்டு ஐதராபாத்திலிருந்து சென்னை திரும்பியுள்ளார்.

சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தில் நயன்தாரா, மீனா ,குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் நிலையில் ஹைதராபாத்தில் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வந்தது.

சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்

கடந்த ஆண்டு இப் படத்தின் ஷூட்டிங்கின்போது படப்பிடிப்பில் இருந்த 8 பேருக்கு கொரோனா உறுதியானதால் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்துக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அவர் ஓய்வெடுக்க சென்னை திரும்பினார். பின்னர் சிறிது கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கடந்த மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கியது . இதில் நடிகர் ரஜினிகாந்த் , நயன்தாரா ஆகியோர் கலந்து கொண்டனர். படப்பிடிப்பில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு , தடுப்பு நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பு நடந்து வந்தது. ரஜினிகாந்தை சந்திக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்

இந்நிலையில், ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு முடிவடைந்ததால் ரஜினிகாந்த் சென்னை திரும்பியுள்ளார். அண்ணாத்த படம் முடிந்து ஹைதராபாத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பிய நிலையி அவருடன் நடிகர் மோகன் பாபு மகளும் நடிகையுமான லட்சுமி மஞ்சு எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது