8 வருடங்களுக்கு பிறகு...ஒரே நாளில் வெளியாகும் வாரிசு - துணிவு

 
tn

பொங்கல் பண்டிகையையொட்டி 8 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள் ஒரேநாளில் வெளியாகவுள்ளன.

varisu


பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும்,  நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படமும் வருகிற ஜனவரி 11ஆம் தேதி உலகமெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  இதன் மூலம் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது. 

thunivu

சமீபத்தில் அஜித்தின் துணிவு பட டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் 40 மில்லியன் வபார்வையாளர்களை கடந்து  சாதனை படைத்தது.  இதே போல நேற்று மாலை விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இதனால் வருகிற பொங்கல் வாரிசு பொங்கலா? துணிவு பொங்கலா? என விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.இதனால் இருதரப்பு ரசிகர்களும் துணிவு - வாரிசு உள்ளிட்ட இரு படங்களுக்கு அதிக ஆர்வத்துடன் ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கின்றனர்.