படத்தின் அப்டேட் கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள்- சிம்பு

 
str

படத்தின் அப்டேட் கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள் என ரசிகர்களுக்கு சிம்பு கோரிக்கை விடுத்துள்ளார்.

Image


இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான வென்று தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், இந்த படத்தின் 50-ஆவது நாள் வெற்றி விழா சென்னை சத்யம் திரை அரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் சிம்பு,உதயநிதி ஸ்டாலின் உட்பட வெந்து தணிந்தது காடு படத்தின் படக்குழுவும்ம்  சரத்குமார், விகரம் பிரபு உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொண்டனர்.

விழா மேடையில் பேசிய நடிகர் சிம்பு, “தற்போதைய காலகட்டம் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று நினைக்கிறேன்.நான் இந்த திரைப்படத்தில் முத்து என்ற கதாபாத்திரமாக வாழ்ந்தேன். படம் பண்ணும் போது அப்டேட் வேண்டும் என்று கேட்கிறீர்கள். என்னுடைய படம் மட்டுமில்லாமல் எல்லாருடைய படங்களுக்கும் சேர்த்து தான் சொல்கிறேன். தயவு கூர்ந்து அப்டேட் கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள். உங்களின் ஆர்வத்தை புரிந்துகொள்ள முடியுது. உங்களுக்கு நல்ல படத்தை கொடுக்க தான் நாங்க உழைத்துக்கொண்டு இருக்கிறோம்” எனக் கூறினார். 

ஏற்கனவே சிம்புவை வைத்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான, 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய இரண்டு படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.