15 வருடம் கழித்து மீண்டும் தமிழில் களமிறங்கும் அஜித், விக்ரம் நாயகி!

 

15 வருடம் கழித்து மீண்டும் தமிழில் களமிறங்கும் அஜித், விக்ரம் நாயகி!

நடிகை பிரியங்கா திரிவேதி 15 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு புதிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

சென்னை: நடிகை பிரியங்கா திரிவேதி 15 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு புதிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 ‘ராஜ்ஜியம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்,அறிமுகமானவர் நடிகை பிரியங்கா திரிவேதி. அப்படத்தைத் தொடர்ந்து அஜித் நடித்த ராஜா பின்பு விக்ரம் நடித்த காதல் சடுகுடு போன்ற திரைப்படங்களில் நடித்துத்திருந்தார். அதன் பின்  கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார்.

priyanka trivendi

இந்த நிலையில் 15 வருடம் கழித்து மகத், யாஷிகா ஆனந்த் ஜோடியாக நடித்து வரும் படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கப் பிரியங்கா திரிவேதி ஒப்புக்கொண்டுள்ளார். இதை பற்றி தனியார் நாளிதழ் பேட்டியில் கூறுகையில், ‘உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் இந்த படம் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு போன வாரம் தான் எனக்கு கிடைத்தது.  இது தமிழ்-கன்னட மொழிகளில் வெளியாவதால் நான் கூடுதல் மகிழ்ச்சியில் உள்ளேன். தமிழ் படங்களில் நடித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வருவதில் மகிழ்ச்சி.
 
இதில் என்னுடைய கதாபாத்திரம் முக்கியமானது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். அடுத்த வாரத்திலிருந்தது நான் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன். திருமணத்திற்குப் பிறகு நான் நடிக்கவருவேன் என்று நம்பவில்லை. குழந்தைகளைக் கவனிப்பதிலே நேரம் சரியாக இருந்தது. தற்போது மீண்டும் நடிக்க வந்ததில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கூறியுள்ளார்.