12 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களின் கவனம் பெற்ற க/பெ.ரணசிங்கம் டீசர்! வலுவான கதைக்கு பலமான வரவேற்பு…

 

12 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களின் கவனம் பெற்ற க/பெ.ரணசிங்கம் டீசர்! வலுவான கதைக்கு பலமான வரவேற்பு…

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்ம துரை, நம்ம வீட்டுப்பிள்ளை போன்ற படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியுடன், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் படம் க/பெ.ரணசிங்கம். இப்படத்தை இயக்குநர் பி.விருமாண்டி இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க கிராமத்து பிரச்னைகளை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். அறம், ஐரா, தும்பா போன்ற படங்களைத் தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விவசாயம், தண்ணீர் பிரச்னைகளை மையமாகக் கொண்டு இயக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

12 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களின் கவனம் பெற்ற க/பெ.ரணசிங்கம் டீசர்! வலுவான கதைக்கு பலமான வரவேற்பு…

இப்படத்தின் க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியானது. இதையடுத்து க/பெ.ரணசிங்கம் படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியானது. டீசரில் அரசியல்வாதிகளுக்கு எதிராக மக்கள் போராடுவது போலவும், புறம்போக்கு நிலத்திற்குபட்டா என்பன உள்ளிட்ட காட்சிகள் மனதை வருடின. ஊரடங்கால் முடங்கி போயிருந்த இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் சமீபத்தில் தொடங்கியது.இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியான 12 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்கள் டீசரை பார்த்திருப்பதாக கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. வலுவான படத்திற்கு மக்கள் மத்தியில் பலமான வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் ட்விட்டரில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் குறிப்பிட்டுள்ளது.