சினிமா விளம்பரங்களுக்கு என்னை அணுகவும்: ஹர்பஜன் சிங் அதிரடி அறிவிப்பு!

 

 சினிமா விளம்பரங்களுக்கு என்னை அணுகவும்: ஹர்பஜன் சிங் அதிரடி அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் விளம்பரங்களுக்குத் தன்னை அணுகுமாறு ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். 

 சினிமா விளம்பரங்களுக்கு என்னை அணுகவும்: ஹர்பஜன் சிங் அதிரடி அறிவிப்பு!

சென்னை: தமிழ் சினிமாவின் விளம்பரங்களுக்குத் தன்னை அணுகுமாறு ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். 

இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், தமிழில் ட்வீட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் ஐபிஎல் போட்டி மட்டுமின்றி தமிழ் பண்டிகைகள், தமிழ்நாடு தொடர்பான விஷயங்கள் என தமிழில் ட்வீட் செய்து வருகிறார். 

அந்த வகையில் தமிழ் சினிமாவுக்கு விளம்பரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அது குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘என் மூலமாகத் தமிழ் சினிமா  விளம்பரங்கள், ஒப்பந்தங்கள்,வியாபாரம்,சமூக வலைத்தள விளம்பரங்கள் செய்ய விரும்பினால், தொடர்புக்கு அணுகவும்- என் அன்பு தம்பி, சின்னாளப்பட்டி சரவணன் பாண்டியன்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

அந்த ட்வீட்டை கண்ட ரசிகர்கள் சிறிது நேரத்தில் அந்த பதிவை வைரலாக ஆரம்பித்துவிட்டனர். ஆக மொத்தத்தில் இனி தமிழ் சினிமாவில் படங்களை புரொமோஷனுக்கு ஹர்பஜன் சிங் உதவுவார் என்றே இதன் முலம் தெரியவந்துள்ளது.