காதல் மேஜிக் செய்த ரொமாண்டிக் கூட்டணியில் விரிசல்!

 

காதல் மேஜிக் செய்த ரொமாண்டிக் கூட்டணியில் விரிசல்!

கோலிவுட்டில் காதலை வளர்த்த பெருமைக்குரிய கூட்டணியில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோலிவுட்டில் காதலை வளர்த்த பெருமைக்குரிய கூட்டணியில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

25 ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்து பல வெற்றிகளை குவித்த கதை-எழுத்து-மியூசிக் மேஜிக் கூட்டணி கிட்டதட்ட உடைந்துவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபடுகிறது. இந்த கூட்டணியின் படங்கள் பெரிதாக வெற்றியை சுவைக்காவிட்டாலும், பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துவிடும்.

பாடல்களை வைத்தே படத்துக்கு விளம்பரம் தேடித்தரும் இந்த கூட்டணியின் ரொமாண்டிக் மேஜிக் ரசிகர்களின் காதுகளில் ஒருபோதும் விருந்துபடைக்க தவறியதில்லை. நன்றாக போய்க் கொண்டிருந்த இந்த கூட்டணியில் சமீபமாக பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காதலுக்கு தூதுவிடும் பூவின் கதைக்கு சொந்தமானவரது சமீபத்திய படத்தில், பாதிப்படத்திற்கு லவ் மியூசிக் போட்ட இசைக்குரியவர், மீது படத்திற்கு உதவியாளர்களை வைத்து மெட்டுப் போட்டுள்ளார். மேலும், பூ கதைக்கு சொந்தமானவரிடம் இருந்து சம்பளத்தையும் கறாராக கரந்துள்ளார் மியூசிக் நாயகன். இதனால் கதைக்கு சொந்தக்காரர் மியூசிக் போடுபவர் மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக தனது அடுத்தப்படத்திற்கு மியூசிக் போடுபவரை அதிரடியாக மாற்றிவிட்டாராம்.

இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம், பெண்கள் விஷயத்தில் லீலைகள் செய்து சர்ச்சையில் சிக்கிய எழுத்தின் சொந்தக்காரருக்கு எதிராக பலரும் போர்க்கொடி தூக்க, மியூசிக் போடுபவர் வீட்டிலேயும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை சரி செய்ய எழுத்துக்குரியவர் பலமுறை தூது அனுப்பியும் பிரயோஜனம் இல்லாமல் போனது. ஆக மியூசிக் போடுபவர் இந்த மேஜிக் கூட்டணியில் இருந்து விலக திட்டமிட்டு தான் இதையெல்லாம் செய்வதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.