‘வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை’ : இந்தியன் 2 விபத்து குறித்து லைகா நிறுவனம் இரங்கல்!

 

‘வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை’ : இந்தியன் 2  விபத்து குறித்து லைகா  நிறுவனம் இரங்கல்!

இந்த படத்தை  லைகா புரொடக்ஷன்ஸ்  தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

ஷங்கர் இயக்கத்தில் மாபெரும் படைப்பாகத் தயாராகி வரும் இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.   இந்த படத்தை  லைகா புரொடக்ஷன்ஸ்  தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

ttn

பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் செம்பரம்பாக்கத்தில் உள்ள பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்து வந்தது. இதையடுத்து நேற்றிரவு 9 மணியளவில் படப்பிடிப்பு தளத்தில், ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த கிரேன் ஒன்று அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

ttn

இதில்  கிரேனுக்கு அடியில் சிக்கி உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர்கள் மது மற்றும் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

இந்நிலையில் இதுகுறித்து லைகா  புரொடக்ஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தாங்கள் உணரும் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. கடின உழைப்பாளிகள் மூவரை இழந்துவிட்டோம். விபத்தில் உயிரிழந்தவர்களை  இழந்து வாழும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்து கொள்கிறோம்’ என்று கூறியுள்ளது.