மீண்டும் காதலில் விழுந்த ஸ்ருதி…இந்த முறையும் வெளிநாட்டு பய தான்!?

 

மீண்டும் காதலில் விழுந்த ஸ்ருதி…இந்த முறையும் வெளிநாட்டு பய தான்!?

பாலிவுட் வட்டாரத்தில் ஸ்ருதி ஹாசன் மீண்டும் வெளிநாட்டவர் ஒருவரைக் காதலிப்பதாகச்  செய்திகள் வெளியாகியுள்ளன .

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடிகையாகவும் , பாடகியாகவும்  வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன்.

 


 

பட வாய்ப்பு இல்லாத சமயத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பர படங்கள், இசை கச்சேரிகள் போன்ற செயல்பாடுகளில் தீவிரமாகவே செயல்பட்டு வருகிறார். பிரிட்டிஷ் நடிகர் மைக்கேல் கோர்சலை காதலித்து வந்த ஸ்ருதி  சமீபத்தில் அவரை பிரிந்தார்.

ttn

மேலும் ஸ்ருதி  ஹாசன் 2017இல் தெலுங்கில்  வெளியான கட்டமராயுடு படத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து சிறிதுகாலம் ஓய்வெடுத்தார். தற்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடிக்கவுள்ளார். இதுமட்டுமின்றி தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

ttn

இந்நிலையில் ஸ்ருதி மும்பையில் உள்ள லோகந்த்வாலா பகுதியில் வெளிநாட்டு நபர் ஒருவருடன் சென்றுள்ளார். முதலில் அது ஸ்ருதி ஹாசன்  தான்  என்பது பலருக்கும் தெரியவில்லை. ஆனால்  புகைப்பட கலைஞர்கள் சிலர் அது ஸ்ருதி ஹாசன் என்பதை அடையாளம் கண்டு  வளைத்து வளைத்து போட்டோ எடுக்க ஆரம்பித்தனர். இதுகுறித்து பாலிவுட் வட்டாரத்தில் ஸ்ருதி ஹாசன் மீண்டும் வெளிநாட்டவர் ஒருவரைக் காதலிப்பதாகச்  செய்திகள் வெளியாகியுள்ளன .

ttn

 மைக்கேல் கோர்சலை பிரிந்த பிறகு தான்  ஸ்ருதி  ஹாசன் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். தற்போது  மீண்டும் அவர்  காதலில் விழுந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.