சூடுபிடிக்கும் மீ டூ விவகாரம்: மனைவியுடன் சேர்ந்து ஆபாசமாக திட்டிய சுசி கணேசன் – அமலா பால்!

 

சூடுபிடிக்கும் மீ டூ விவகாரம்: மனைவியுடன் சேர்ந்து ஆபாசமாக திட்டிய சுசி கணேசன் – அமலா பால்!

லீனா மணிமேகலையின் மீ டூ புகாருக்கு ஆதரவளித்ததையடுத்து, இயக்குநர் சுசி கணேசன் தனது மனைவியுடன் சேர்ந்து அமலா பாலை ஆபாசமாக வசைபாடியுள்ளார்.

சென்னை: லீனா மணிமேகலையின் மீ டூ புகாருக்கு ஆதரவளித்ததையடுத்து, இயக்குநர் சுசி கணேசன் தனது மனைவியுடன் சேர்ந்து அமலா பாலை ஆபாசமாக வசைபாடியுள்ளார்.

’திருட்டுப்பயலே’ இயக்குநர் சுசி கணேசன் மீது பெண் இயக்குநர் லீனா மணிமேகலை தெரிவித்த பாலியல் புகாருக்கு நடிகை அமலா பால் ஆதரவு தெரிவித்திருந்தார். ‘திருட்டுப்பயலே 2’ படத்தில் நடிக்கும் போது தானும் சில பாலியல் ரீதியிலான தொல்லைகளை சந்தித்ததாக அமலா பால் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இது, சமூக வலைத்தளங்களில் பரபரப்பான நிலையில், இயக்குநர் சுசி கணேசனும் அவரது மனைவியும் தன்னை போனில் அழைத்து ஆபாசமாக பேசி அவமானப்படுத்தியதாக அமலா பால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்த அவரது ட்வீட்டில், ‘மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. சுசியும் அவரது மனைவியுன் எனக்கு போன் செய்தார்கள். எனது தரப்பு விளக்கத்தை கூற எடுத்து பேசினேன். சுசியின் மனைவியை சமாதானப்படுத்த முயன்ற போது, சுசி என்னை ஆபாசமாக பேசினார். அதற்கு அவரது மனைவி சிரித்துக் கொண்டிருந்தார். இருவரும் என்னை அவமானப்படுத்த நினைத்து இப்படி மிரட்டினர்.’ என்று ட்வீட்டியுள்ளார்.

மீ டூ புகார் தெரிவித்த லீனா மணிமேகலையின் பாலியல் புகாரை மறுத்த சுசி கணேசன் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். தற்போது சுசி கணேசனுக்கு எதிராக நடிகை அமலா பால் புகார் கூறியுள்ள நிலையில், அவர் போனில் ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.