விவாகரத்துக்குப் பிறகும் ரகுவரன் செய்த உதவிகள்… மனம் திறந்த ரோஹிணி!

விவாகரத்துக்குப் பிறகும் ரகுவரன் செய்த உதவிகள்… மனம் திறந்த ரோஹிணி!

வில்லன், ஹீரோ, குணச்சித்திரம், நகைச்சுவை என்று அனைத்திலும் முத்திரை பதித்தவர் நடிகர் ரகுவரன். அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பலவிதமான பேச்சுக்கள் இருந்த நிலையில் நடிகை ரோஹிணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஏழு, எட்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி பின்னர் பிரிந்தது.

raghuvaran-and-rohini

இந்த நிலையில் ரகுவரன் பற்றிய நினைவுகளை நடிகை ரோஹிணி பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “நானும் அவரும் விரும்பித்தான் திருமணம் செய்துகொண்டோம். ஆண் குழந்தை பிறந்த நிலையில் எங்களுக்கு இடையே விவாகரத்து ஆனது. அப்போது முதல் தனி ஆளாக என் மகனை வளர்த்து வருகிறேன். குடும்ப வாழ்விலிருந்து பிரிந்தாலும் நானும் ரகுவரனும் நல்ல நண்பர்களாகவே இருந்தோம். விவாகரத்துக்குப் பிறகு ஒரு முறை படப்பிடிப்பு முடித்து ரயிலில் வந்தபோது டிக்கெட் தொலைந்துவிட்டது. நான் யார் என்று தெரிந்தும் கூட டிக்கெட் பரிசோதகர் கீழே இறங்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறிவிட்டார். உடனே, நான் ரகுவரனுக்கு போன் செய்து சென்னேன். அவர் டிடிஆரிடம் பேசினார். என்ன பேசினார் என்பது தெரியாது ஆனால் நாங்கள் மீண்டும் ரயிலில் பயணிக்க அவர் அனுமதித்தார். இப்படி நிறைய சூழ்நிலைகளில் அவர் உதவினார்.
மகன் படிப்பு செலவுக்காகப் பணம் தேவைப்பட்டது. இதனால் மீண்டும் நடிக்க வந்தேன். விருமாண்டி தொடங்கி பாகுபலி வரை தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்கிறேன். இப்போது என் மகன் அமெரிக்காவில் மருத்துவம் படித்து பட்டம் பெற்றுவிட்டான். இனிமேல் எனக்குக் கவலையில்லை. நடிக்க வேண்டிய அவசியமில்லை. சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபடலாம்” என்றார்.