‘அரசியல்வாதிகளுக்கு தகுதி தேர்வு வேண்டும்’: கொந்தளிக்கும் நடிகர் ராஜ்கிரண்

 

‘அரசியல்வாதிகளுக்கு தகுதி தேர்வு வேண்டும்’: கொந்தளிக்கும் நடிகர் ராஜ்கிரண்

முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

நடிகர் ராஜ்கிரணை அறியாதவர்கள் இருக்க முடியாது. தமிழ் சினிமாவில் ஹீரோவென்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை உடைத்தவர்களில் இவரும்  ஒருவர். கரடுமுரடான தோற்றத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர், தற்போது முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.  அதே சமயம் சமூகம் சார்ந்த கருத்துக்களையும் ராஜ் கிரண் பதிவிடுவதை  மறப்பதில்லை. 

rajkiran

இந்நிலையில் திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்து பாஜக வெளியிட்ட  புகைப்படம் தொடர்பாக நடிகர் ராஜ்கிரண் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அதில், 
நம் கண்களுக்குத்தெரியாத,
நம் அறிவுக்கும் புலப்படாத,
இந்து, கிருஸ்துவம், இஸ்லாம் போன்ற
மதங்கள் தோன்றுவதற்கு,
எவ்வளவு காலத்திற்கு முன்பு என்று கூட,
கணிக்க முடியாத காலகட்டங்களில்
வாழ்ந்த, “திருவள்ளுவர்” என்று அழைக்கப்படும், ஒரு மிகப்பெரும் “மகானை”, சந்திக்கு இழுத்திருக்கிறார்கள்,
நம் அரசியல்வாதிகள்…

நம் கண்களுக்குத்தெரிந்து,
நம் அறிவுக்கு புலப்பட்டு,
எத்தனையோ சீர்கேடுகள்,
நம் நாட்டில் நிலவுகின்றன…

அதையெல்லாம் மறக்கடிக்கத்தான்,
இந்த கூத்துக்களோவென்று தான்,
எண்ணத்தோன்றுகிறது…

எது எப்படியிருந்தாலும்,
“தகுதித்தேர்வு” வைத்து,
அரசியல்வாதிகள் தேர்ந்தெடுக்கப்படாத
வரையில், மக்கள் இப்படியான கூத்துக்களைத்தான் தொடர்ந்து
பார்த்துக்கொண்டிருப்பார்கள்…

வாழ்க ஜனநாயகம்.
வாழ்க மக்கள் நலன்.
வாழ்க அரசியல்வாதிகள்.’

என்று குறிப்பிட்டுள்ளார். ராஜ்  கிரணின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.