ஷூட்டிங் ஸ்பாட்டில் ‘பேட்ட’ ரஜினியை சூழ்ந்த ரசிகர்கள்!

 

ஷூட்டிங் ஸ்பாட்டில் ‘பேட்ட’ ரஜினியை சூழ்ந்த ரசிகர்கள்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தி வரும் ‘பேட்ட’ படத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

லக்னோ: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தி வரும் ‘பேட்ட’ படத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த சில வாரங்களாக லக்னோவில் ‘பேட்ட’ படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அங்கு பேட்ட ரஜினியின் ஃபிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரஜினியை பார்த்த ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டை சூழ்ந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பல்வேறு முன்னனி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மெயின் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சோமசுந்தரம், சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி, முனீஷ்காந்த் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.