விக்ரம் செய்த நம்பிக்கை துரோகம்! கைக்கொடுத்த சூர்யா! உற்சாகத்தில் பாலாவின் அடுத்த படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பாலா நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க“வர்மா” என்ற படத்தை இயக்கியிருந்தார். ஆனால் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த பின்னர், முழு படத்தையும் பார்த்த தயாரிப்பு நிறுவனத்தினருக்கு படத்தில் திருப்தி இல்லாததால் பாலா இயக்கியிருந்த முழு படத்தையும் அப்படியே குப்பையில் போட்டு விட்டு, படத்தை `ஆதித்ய வர்மா’ என்கிற பெயரில் வேறு இயக்குநரை வைத்து மீண்டும் படப்பிடிபை நடத்தினார்கள். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

bala and vikram

suriya and bala

தனது நெருங்கிய நண்பரான விக்ரம் செய்த துரோகத்தால் மனம் வெறுத்து சினிமாவை விட்டு இதுநாள் வரையில் விலகியிருந்த பாலா தற்போது மீண்டும் படம் இயக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் காப்பான், சூரரைப்போற்று ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அதே சமயம் சூர்யாவின் திரையுலக வாழ்வில் இயக்குநர் பாலா இயக்கிய நந்தா, பிதாமகன் ஆகிய படங்கள் அவருக்கு சிறந்த நடிகர் என்ற பெயரையும் பரவலான ரசிகர்களையும் பெற்றுத் தந்தது. பாலாவால் ஹீரோவாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் விக்ரம், பாலாவைக் கைவிட்ட நிலையில், தன்னுடைய சினிமா வாழ்க்கையை மாற்றியமைத்து வாழ்வு கொடுத்த இயக்குநர் பாலாவை கைவிடாமல் ஆதரவு கொடுத்த நடிகர் சூர்யாவிற்கு வாழ்த்துகள் குவிகின்றன!