மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா – விஜய்சேதுபதி கூட்டணி…அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா – விஜய்சேதுபதி கூட்டணி…அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இயக்குநர்  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள  அடுத்தப்படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர்  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள  அடுத்தப்படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

ttn

இயக்குநர் விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து நானும் ரௌடி தான் படத்தை இயக்கினார். இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவனின் அடுத்தப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. காத்துவாக்குல ரெண்டு காதல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தயாரிப்பாளர் லலித் குமார் படத்தை  தயாரிக்கிறார். இப்படம் காதல், காமெடி என கலர்புல்லாக இருக்கும்  என நம்பலாம் இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.