மாநாடு: சிம்பு ஜோடியாகிறார் கல்யாணி பிரியதர்ஷன்

 

மாநாடு: சிம்பு ஜோடியாகிறார் கல்யாணி பிரியதர்ஷன்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் ‘மாநாடு’. இந்த படத்தை நாகராஜ சோழன் எம்.ஏ எம்.எல்.ஏ , கங்காரு உள்ளிட்ட படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரோடக்‌ஷன் மூலம் தயாரிக்கிறார்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள ‘மாநாடு’ படத்தின் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவு செய்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் ‘மாநாடு’. இந்த படத்தை நாகராஜ சோழன் எம்.ஏ எம்.எல்.ஏ , கங்காரு உள்ளிட்ட படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரோடக்‌ஷன் மூலம் தயாரிக்கிறார். அவர் தற்போது மிக மிக அவசரம் என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.இந்தப் படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது.இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க ‘மாநாடு’ என்ற படத்தை தயாரிக்கவிருப்பதாக கடந்த மாதம் செய்தி வெளியானது.

மிக மிக அவசரம்

மிக

சமீபத்தில் மாநாடு திரைப்படம் கைவிடப்பட்டது என சிலர் கொழுத்திப் போட ,அதற்கு சுரேஷ் காமாட்சி மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.தற்போது இந்தப்  படத்தில் பழம்பெரும் இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டிருப்பதை சுரேஷ் காமாட்சி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

கல்யாணி பிரியதர்ஷன், சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தில் கதாநாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

‘மாநாடு’ ஒரு பொலிட்டிகல் திரில்லர் கதை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்காக உடல் எடையை குறைக்கதான் சிம்பு லண்டன் சென்றிருக்கிறார். அதற்குள்ளாக படம் கைவிடப்பட்டுவிட்டது என்ற வதந்தியை கிளப்பிவிட்டிருக்கிறார்கள்.

இதையும் வாசிக்க: ஜெயலலிதா கொடுத்த பரிசுப்பெட்டி! உற்சாகத்தில் டி.டி வி. தினகரன் குரூப்!