பொங்கல் விருந்து: நாளை மாலை வெளியாகிறது மாஸ்டர் 2வது லுக்

 

பொங்கல் விருந்து: நாளை மாலை வெளியாகிறது மாஸ்டர் 2வது லுக்

பிகில் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.  விஜய் கல்லூரி பேராசியராக நடித்துக் கொண்டிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இன்னும் சில தினங்களில் மாஸ்டர் திரைப்படத்தின் சூட்டிங் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படம் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது. ஆனால் படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் விநியோகம் விற்பனையானதாக செய்திகள் வெளியானது.

கடந்த சில நாட்களுக்கு முன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி படத்தின் 2வது லுக் நாளை வெளிவரவுள்ளது.