பிரபல நடிகருக்கு வில்லனான மற்றொரு பிரபல நடிகர்..!

பிரபல நடிகருக்கு வில்லனான மற்றொரு பிரபல நடிகர்..!

சென்னை: தமிழ் சினிமாவில் ஹீரோவாக ஜொலித்து வந்த நடிகர் சிம்பு முதல்முறையாக வில்லனாக நடிக்கவுள்ளார். வில்லனாக அவர் நடிக்கும் படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார்.

சென்னை: தமிழ் சினிமாவில் ஹீரோவாக ஜொலித்து வந்த நடிகர் சிம்பு முதல்முறையாக வில்லனாக நடிக்கவுள்ளார். வில்லனாக அவர் நடிக்கும் படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்களை கொண்ட ஹீரோக்களில் நடிகர் சிம்புவும் ஒருவர். சிம்பு என்றாலே வம்பு என்றளவிற்கு அதிகளவில் சர்ச்சைகளில் சிக்குபவர் சிம்பு. எது எப்படியோ? ஆனால், சிம்புவின் படம் வெளியாகும் போது, திருவிழாவை போல் கொண்டாடுவார்கள் அவரது ரசிகர்கள். அந்தளவிற்கு அன்பு வைத்துள்ளனர். சிம்புவும் அதே அளவில்.

தற்போது லண்டனில் உள்ள சிம்பு, தனது உடல் வாகை பழைய நிலைக்கே கொண்டு வர அங்கு சிறப்பு பயிற்சிகளை எடுத்து வருகிறார்.

simbu arya

இந்நிலையில், நடிகர் ஆர்யா ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தில் சிம்பு வில்லனாக நடிக்கிறார். “மப்டி” என்ற கன்னட படத்தின் ரீமேக்கில் தான் இவர்கள் நடிக்கின்றனர். சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி நடித்த இப்படம் கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. முக்கிய கேரக்டரில் சரத்குமார் நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.