‘பிக் பாஸ் வீட்டுக்குள் எந்த அவமரியாதையும் ஏற்படவில்லை’ : இயக்குநர் சேரன் திடீர் பேட்டி!

 

‘பிக் பாஸ் வீட்டுக்குள் எந்த அவமரியாதையும் ஏற்படவில்லை’ : இயக்குநர் சேரன் திடீர் பேட்டி!

நாளுக்கு நாள் அவருக்கு கிடைத்த ஆதரவு அதிகரித்துக் கொண்டே சென்ற நிலையில் பிக் பாஸ் டைட்டில் வின்னராக வருவார் என்று கருதும் அளவிற்கு அவரின் உழைப்பு இருந்தது.

பிக் பாஸ் வீட்டுக்குள் எனக்கு எந்த அவமரியாதையும் ஏற்படவில்லை என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார். 

பிக் பாஸ் வீட்டில் 90 நாட்கள் கடந்த நிலையில் போட்டியிலிருந்து வெளியேறியவர்  இயக்குநர்  சேரன். வெற்றி இயக்குநராக  வலம் வந்த இவர், பொருளாதார நெருக்கடி காரணமாக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார். நாளுக்கு நாள் அவருக்கு கிடைத்த ஆதரவு அதிகரித்துக் கொண்டே சென்ற நிலையில் பிக் பாஸ் டைட்டில் வின்னராக வருவார் என்று கருதும் அளவிற்கு அவரின் உழைப்பு இருந்தது.

cheran

இந்நிலையில் சமீபத்தில் சென்னை வடபழனியில் உள்ள திரையரங்கத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை  படத்தை பார்த்த சேரன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘பிக் பாஸ் வீட்டுக்குள் எனக்கு அவமரியாதை கிடைத்ததாக சக இயக்குநர்கள்  கோபப்பட்டுள்ளார்கள். அவர்களை ஏன் என்று ஒருபோதும் கேட்கமாட்டேன். அவர்கள் என் மீது உள்ள அன்பின் காரணமாக தான் இப்படி பேசியுள்ளார்கள். ஆனால்  எனக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் எந்த அவமரியாதையும் ஏற்படவில்லை.

cheran

 நாளாக நாளாக அவர்கள் என்னை பற்றி தெரிந்து கொண்டார்கள்.  நான் மரியாதையுடன் தான் வெளியில் வந்தேன். சினிமாவில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி  ரசிகர்களுக்குள் மோதல் இருக்கும். சிவாஜி ரசிகருக்கு எம்ஜிஆரை பிடிக்காது. ஆனால் அதை அவமரியாதை என்று கூறுவது தவறு’ என்றார்.

cheran

தொடர்ந்து பேசிய அவர், ‘கமல் ஹாசன் சம்மதித்தால்  தேவர் மகன் 2 படத்தை இயக்க தயாராக இருப்பதாகவும், நான் விஜய் பிக் பாஸ் வீட்டுக்குள் போக காரணம்  விஜய் சேதுபதி தான்’ என்று கூறியுள்ளார்.