பிக் பாஸ் மஹத்- யாஷிகா டைட்டில் அறிவிப்பு வெளியானது! 

 

பிக் பாஸ் மஹத்- யாஷிகா டைட்டில் அறிவிப்பு வெளியானது! 

சென்னை: பிக் பாஸ் மஹத்- யாஷிகா இணைந்து நடித்துள்ள படத்தின் டைட்டில் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 2-வில் 16 போட்டியாளர்களுள் கலந்து கொண்டவர்கள் யாஷிகா மற்றும் மஹத . முதலில் நண்பர்களாகப் பழகி வந்த வந்தனர். பின்னர் யாஷிகா, மஹத் மீது காதல் வயப்பட்டு வெளிப்படையாக அவரிடம் காதலைக் கூறினார். ஆனால் மஹத் வெளியே தனக்குக் காதலி இருப்பதால் நண்பர்களாகப் பழகலாம் என்று சாதுரியமாகப் பேசி யாஷிகாவைக் கழட்டிவிட்டுவிட்டார்.

அதைத்தொடர்ந்து வெளியே வந்த இவர்கள் பரதன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மகேஷ் இயக்கத்தில் நடித்து வந்தனர். சமீபத்தில் படத்தின் பரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை பிரபல இசையமைப்பாளர் அனிருத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  ’இவன் தான் உத்தமன்’ என்ற பெயரிட்டுள்ள இந்த படத்தில் மஹத், யாஷிகா காதலர்களாக நடித்துள்ளார்களாம். 

Finally Here is the title of my first solo movie! Need all your love and blessings ?❤️ #mahatyashikacombo #ivandhanuthaman
#IVANTHANUTHAMAN

#MagVen @MahatOfficial @iamyashikaanand @iamvenkat6 @mahiram20 @MusicThaman @VigneshShivN @onlynikil @manobalam

#Omsairam pic.twitter.com/7l8Er6msRS
— Mahat Raghavendra (@MahatOfficial) August 21, 2019

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு நல்ல கெமிஸ்ட்ரி ஏற்பட்டது. அதே கெமிஸ்ட்ரி  இந்த படத்திலும் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.