பழம்பெரும் நடிகை நாஞ்சில் நளினி உடல்நல குறைவால் காலமானார்!

 

பழம்பெரும் நடிகை நாஞ்சில் நளினி உடல்நல குறைவால் காலமானார்!

 ‘எங்க ஊர் ராஜா’ என்ற திரைப்படத்தின் மூலம் நுழைந்தார். இதையடுத்து ‘அண்ணன் ஒரு கோவில்’, ‘தீர்ப்பு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

பழம்பெரும் நடிகை நாஞ்சில் நளினி உடல் நலக்குறைவால்  நேற்று காலமானார். அவருக்கு வயது 74.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்தவர்  நடிகை நாஞ்சில் நளினி. இவர்  திருநெல்வேலியிலுள்ள அமெச்சூர் நாடகக் குழு ஒன்றில் நடிக்கச் சேர்ந்தார். தந்து 12 வயதில் நான்கு பேருக்கு தாயாக  நடித்து அசத்தினார். நாடக துறையிலிருந்து சினிமாவுக்குள்  ‘எங்க ஊர் ராஜா’ என்ற திரைப்படத்தின் மூலம் நுழைந்தார். இதையடுத்து ‘அண்ணன் ஒரு கோவில்’, ‘தீர்ப்பு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

ttn

படவாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் சின்னதிரையில் நுழைந்த  நாஞ்சில் நளினி மந்திர வாசல்,அச்சம் மடம் நாணம்’ , ‘பிருந்தாவனம்’, ‘சூலம்’ போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.  தமிழக அரசின்  ‘கலைமாமணி’ விருது பெற்றுள்ள இவர்  ‘ரேவதி ஃபைன் ஆர்ட்ஸ்’ என்ற நாடகக் கம்பெனியைத் தொடங்கியது  குறிப்பிடத்தக்கது. 

ttn

இந்நிலையில்   உடல் நலக்குறைவால் நடிகை நாஞ்சில் நளினி சென்னையில் நேற்று உயிரிழந்தார், இவருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். இவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் மற்றும் திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.