பரவை முனியம்மாவின் உருக்கமான கோரிக்கை!   விஷால்… விக்ரம் எல்லாம் மறந்தே போனாங்க!

பரவை முனியம்மாவின் உருக்கமான கோரிக்கை!   விஷால்… விக்ரம் எல்லாம் மறந்தே போனாங்க!

புகழ் வெளிச்சம் இருக்கும்  போது தான் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் சலாம் வைப்பார்கள். சினிமாவில் இயங்கி வருபவர்கள் தொடர்ந்து கால்களை ஆட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பார்கள். கொஞ்ச நேரம் கால்களை ஆட்டாவிட்டாலும், இறந்து விட்டதாக கருதி அடுத்த ஆளை நோக்கிச் சென்று விடுவார்கள். எவ்வளவு புகழும், பணமும் கிடைக்கிறதோ அதை விட அசுர வேகத்தில் மனிதர்களைத் தள்ளிவிட்டு அடுத்தவரை நோக்கிச் செல்லும் துறை சினிமா. இங்கு மனிதாபிமனம் எல்லாம் மறக்கப்பட்ட வார்த்தைகள் தான்.

paravai muniyamma

சிறுவயதிலிருந்தே நாட்டுப்புற பாடல்களை பாடி வந்த பரவை முனியம்மா, தூள் படத்தில் விக்ரமுடன் நடித்த பிறகு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தது. அதன் பிறகு விஷால் வரைக்கும் நடித்து விட்டார். வறுமையில் சிக்கித் தவித்த பரவை முனியம்மாவிற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வைப்புத் தொகையாக 6 லட்சம் ரூபாயும், மாதம் 6000 ரூபாய் உதவித் தொகையையும் வழங்க உத்தரவிட்டார். தற்போது 74 வயதாகும் பரவை முனியம்மா, வயோதிகத்தாலும், உடல் நலக்குறைவாலும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார். தனக்கு ஏதேனும் ஏற்பட்டால் தனக்குப் பின் அரசு உதவித் தொகையை தனது மாற்றுதிறனாளி மகனுக்கு வழங்க வேண்டுமென உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார். சிங்கம் போல சினிமாவில் வலம் வந்த பரவை முனியம்மாவின் இந்த நிலையை பார்த்து அவரது ரசிகர்கள் எல்லாம், நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் பதவியில் இருக்கும் நடிகர் விஷாலும், கூடவே நடித்த நடிகர் விக்ரமும் திரையில் மட்டும் தான் உதவிகளைச் செய்வார்களா? பரவை முனியம்மாவின் இந்த நிலையைத் தெரிந்தும் ஏன் யாருமே எட்டிப் பார்க்கவில்லை என்று வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்….
ஒரு வேளை பரவை முனியம்மா போட்டோவுக்கு போஸ் தந்திருக்க மாட்டாரோ?