நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்ப பின்னணி தெரியுமா…’ ஷாக்’ நியூஸ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்ப பின்னணி தெரியுமா…’ ஷாக்’ நியூஸ்..!

1990-ம் ஆண்டு பிறந்த ஐஸ்வர்யா எத்திராஜ் கல்லூரியில் படித்தவர். நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா தனியார் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமையை நிருபித்தவர் என்பது வரைதான் ஐச்வர்யா ராஜேஷ் பற்றி இதுவரை திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் தெரியும்.

தற்போது தமிழ்த் திரையுலகில் வீறு நடைபோறும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் தந்தையும் ஒரு நடிகர்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
தமிழ்த் திரையுலகில் ‘நீதானா அவன்’ படத்தின் மூலம் கால் பதித்தவர்  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அது ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படமாக இல்லை. 

பா.ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடித்த ‘அட்டகத்தி’ படம்தான் ஐஸ்வர்யாவை  திரையுலகுக்கு அடையாளம் காட்டிய படம். விஜய் சேதுபதியுடன் ‘தர்மதுரை’, மணிகண்டன் இயக்கத்தில் ‘காக்கா முட்டை’ என்று அடுத்தடுத்து வந்த படங்களால் டாப் லெவலுக்கு வந்திட்டார். 

1990-ம் ஆண்டு பிறந்த ஐஸ்வர்யா எத்திராஜ் கல்லூரியில் படித்தவர். நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா தனியார் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமையை நிருபித்தவர் என்பது வரைதான் ஐச்வர்யா ராஜேஷ் பற்றி இதுவரை திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் தெரியும்.

rajesh

ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும் இவரது பூர்வீகம் ஆந்திரா.இவரது தந்தை ராஜேஷ் தெலுங்கு திரையுலகில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.1983-ம் ஆண்டு வெளியான ‘ஆனந்த பைரவி’ படம் செம ஹிட்! தவிர,  ஐஸ்வர்யாவின் தாத்தா அமர்நாத், அத்தை ஸ்ரீலட்சுமி இருவரும் தெலுங்கு சினிமாவில் பாப்புலர் நடிகர்கள் என்பது பலருக்கும் தெரியாத உண்மை! 

actress-srilakshmi

பொதுவாக சினிமாவில் நடிக்க வரும் நடிகைகள் தங்களை ராஜ வம்சம் என்று சொல்லிக்கொள்வதுதான் வழக்கம். ரொம்ப சிம்பிளான குடும்பம் என்று தன்னைப் பற்றி ஒரு பிம்பத்தை கட்டி வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.அட.. இதென்ன கலாட்டா..!?