தொடர்படப்பிடிப்பில் தம்பியுடன்… விறுவிறு மாநாடு படப்பிடிப்பு!! 

 

தொடர்படப்பிடிப்பில் தம்பியுடன்… விறுவிறு மாநாடு படப்பிடிப்பு!! 

நடிகர் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளதாகத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடந்த ஆண்டு அறிவித்தார். அதற்காக வெளிநாடு சென்று கடும் பயற்சியெடுத்து தனது உடல் எடையைப் பாதியாகக் குறைத்துக் கொண்டு வந்தார் சிம்பு. இதையடுத்து சிம்புவுடன் ஏற்பட்ட பிரச்னையால் மாநாடு திரைப்படம் கைவிடப்படுவதாகப் படத்தின் தயாரிப்பாளர்  சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.  

நடிகர் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளதாகத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடந்த ஆண்டு அறிவித்தார். அதற்காக வெளிநாடு சென்று கடும் பயற்சியெடுத்து தனது உடல் எடையைப் பாதியாகக் குறைத்துக் கொண்டு வந்தார் சிம்பு. இதையடுத்து சிம்புவுடன் ஏற்பட்ட பிரச்னையால் மாநாடு திரைப்படம் கைவிடப்படுவதாகப் படத்தின் தயாரிப்பாளர்  சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.  இதனால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சியடையப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு மீண்டும் மாநாடு திரைப்படம் தொடங்கும் என படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் மாநாடு படப்பிடிப்பு கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. முதற்கட்டப்படபிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில், தற்போது ஹைதராபாத்தில் காட்சிகள் படமாக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், தொடர்படப்பிடிப்பில் தம்பியுடன் என சிம்புவின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். புகைப்படத்தில் சிம்புவும், சுரேஷ் காமாட்சியும் சிரித்தபடி இருக்கின்றனர். சிம்பு கையில் டீ கப்புடன் இருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.