தர்பார் படத்தை வெளியிடத் தடை?… லைகா புரொடக்ஷன்ஸ் பதிலளிக்க உத்தரவு

 

தர்பார் படத்தை வெளியிடத் தடை?… லைகா புரொடக்ஷன்ஸ் பதிலளிக்க உத்தரவு

ஜனவரி-9 ஆம் தேதி வெளியாகும் என்று லைகா புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகை நயன்தாரா நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தர்பார்’. இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படம் பொங்கல் பண்டிகையின் போது வெளியாகும் என்று பரபரப்பாகக் கூறப்பட்டு வந்த நிலையில், ஜனவரி-9 ஆம் தேதி வெளியாகும் என்று லைகா புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டது. 

ttn

இந்நிலையில், தர்பார் படத்துக்குத் தடை விதிக்க கோரி  டிஎம்ஒய் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா தயாரிப்பில் வெளிவந்த 2.0 படத்தின் மலேசிய விநியோக உரிமையை ரூ.20 கோடிக்கு பெற்றுள்ளதாகவும், அந்த படத் தயாரிப்புக்காக 12 கோடி ரூபாய் 30% ஆண்டு வட்டிக்குக் கொடுத்ததாகவும் அந்த தொகை தற்போது ரூ.23 கோடியே 70 லட்சம் ஆகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

ttt

அதனால், அந்த பணத்தை லைகா நிறுவனம் கொடுக்க வேண்டும் என்றும் அந்த தொகையைக் கொடுக்காமல் தர்பார் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  அந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஜனவரி 2 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.